பெடரர் - நாடல் மோதல் வரலாறு

முன்னணி வீரர்களான இருவரும்  விம்பிள்டன் தொடரில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோத உள்ளனர். இவர்கள் இருவரும் இதுவரை 3 முறை விம்பிள்டனில்  மோதியுள்ளனர். அந்த 3 போட்டிகளும் இறுதிப் போட்டிகளாகும்.

பெடரர் 2006, 2007ம் ஆண்டுகளில் நாடலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். நாடல் 2008ம் ஆண்டு பெடரரை வென்று சாம்பியன் ஆனார். அதன் பிறகு இருவரும் விம்பிள்டன் தொடரில் மோத வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் அரையிறுதியில் இன்று களம் காண்கின்றனர்.இந்த ஆண்டு இவர்கள் மோதும் 3வது அரையிறுதிப் போட்டி.

முதலில்  மார்ச்சில் நடைப்பெற்ற  இண்டியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் இருவரும் மோத இருந்தனர். காயம் காரணமாக நாடல் விலக, பெடரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் 2வதாக ஜூனில் நடந்த பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் பெடரரை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் நாடல். இந்த இருவரும் இதுவரை 40முறை சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளனர். அதில்  நாடல் 24 முறையும், பெடரர் 16 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அதே நேரத்தில்  விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை பெடரர் 8 முறையும், நாடல் 2 முறையும் வென்றுள்ளனர்.

Related Stories: