இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் பலரும் காலிறுதி, அரையிறுதி போட்டிகளை எட்டாமலே பரிதாபமாக வெளியேறினர். நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் ஏஞ்ஜலிக் கெர்பர்(5ம் நிலை) 2வது சுற்றிலேயே அமெரிக்காவின லாரன் டேவிசிடம் தோற்று வெளியேறினார்.முதல் நிலை வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி 4வது சுற்றிலும். 2ம் நிலை வீராஙகனை ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றிலும், 3ம் நிலை வீராங்கனனை செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 4வது சுற்றிலும், 4ம் நிலை வீராங்கனை நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் 3வது சுற்றிலும், 6ம் நிலை வீராங்கனை பெட்ரா குவித்தோவா 4வது சுற்றிலும் தோற்று வெளியேறினர்