வங்கதேசத்தில் ரயில் தடம் புரண்டு 5 பேர் பலி

தாகா: வங்கதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியானார்கள். 67 பேர் காயமடைந்தனர். வங்கதேசத்தின் சில்லெட் நகரில் இருந்து, தலைநகரான தாகா நோக்கி உபாபான் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. மோல்விபசாரில் உள்ள பரம்சால் பகுதியில் ரயில் வந்தபோது எதிர்பாராத விதமாக ரயில்பெட்டிகள் தடம் புரண்டது. இதில் இரண்டு பெட்டி தண்டவாளத்தில் இருந்து கால்வாயில் கவிழ்ந்தன. மேலும் ஒரு பெட்டி தலைகீழாக கவிழ்ந்தது. மேலும் சில பெட்டிகள் தண்டவாளத்தின் பக்கவாட்டில் சாய்ந்தன.

Advertising
Advertising

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள், மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் விரைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த நிலையில் 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 20 பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

Related Stories: