கர்நாடகாவில் கிராமத்தில் தங்கும் நிகழ்ச்சி தரையில் படுத்து உறங்கிய முதல்வர்: சமூக வலைதளங்களில் வைரல்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமி, கிராமத்தில் தங்கும் நிகழ்ச்சி ஒன்றில், அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படுத்து தூங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ‘கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும்’ என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வர் குமாரசாமி யாதகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்  கூறியதாவது:கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. அதற்கு வாய்ப்பே இல்லை. இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். நானே முதல்வராக இருப்பேன். இந்த அரசு பாதுகாப்பாக உள்ளது. கூட்டணி அரசை கவிழ்க்கும்  எதிர்க்கட்சியின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று தேவகவுடா எந்த அர்த்தத்தில் கூறினார் என்பது எனக்கு தெரியாது. அதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன். உள்ளாட்சி தேர்தல்  வரவுள்ளது. அதை மனதில் கொண்டு தேவேகவுடா அவ்வாறு கூறியிருப்பார். தேவகவுடாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  முன்னதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி, சந்திரகி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முந்தைய நாள் இரவே வந்துவிட்டார். அன்றைய தினம் இரவில் அரசு பள்ளியில் ஒரு பெட்ஷிட்  மட்டும் விரித்து தரையில் படுத்து தூங்கினார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டார் ஓட்டல்களில் தங்கி, ஹெலிகாப்டர்களில் விழாவுக்கு வரும் ஆடம்பர முதல்வர்களில் மத்தியில் கர்நாட முதல்வரின்  இந்த எளிமை அனைவராலும் பாராட்டப்படுகிறது. சிலர் இவரது நடவடிக்கை எதிரான கருத்தும் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: