இயக்குநர் ரஞ்சித் கைது தடை நீட்டிக்க மறுப்பு

மதுரை: தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் கடந்த 5ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் பங்கேற்று பேசினார். அப்போது அவர், மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து திருப்பனந்தாள் போலீசார், இயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தனக்கு முன்ஜாமீன் கோரி ரஞ்சித், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். அதில், ‘வரலாற்று ஆய்வுகள் அடிப்படையிலேயே நான் பேசினேன். இதற்கு முன் இந்த கருத்தை பலரும் பேசியுள்ளனர். எந்த சமூகத்திற்கும் எதிராக நான் பேசவில்லை’ எனக்கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘ரஞ்சித்தை கைது செய்ய மாட்டோம்’ என போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.  இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து ஒரு மனு செய்யப்பட்டிருந்தது.  தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது, கைது செய்யமாட்ேடாம் என்ற போலீசாரின் உத்தரவாதத்தை நீட்டிக்க மறுத்த நீதிபதி விசாரணையை ஜூன் 24க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: