சர்வதேச யோகா தினம் 2019: ராணுவ வீரர்கள் குதிரை, உறைபனி மீது அமர்ந்து யோகாசனம்

லக்னோ: சர்வதேச யோகா தினத்தையொட்டி ராணுவ வீரர்கள் குதிரை மீது அமர்ந்து யோகா செய்தனர். உத்திரபிரதேச மாநில சஹாரன்பூரில் ராணுவ மேஜர் ஆஷிஷ் மற்றும் கமாண்டோ மங்கல் சிங் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் குதிரை மீது அமர்ந்து யோகாசனங்களை செய்தனர். மேலும் EQUESTRAIN எனப்படும் இந்த யோகா குதிரை சவாரி செய்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறுகின்றனர். இந்திய திபெத் எல்லையோரம் பணிபுரியும் ராணுவ வீரர்கள் ஆற்றில் நின்று யோகாசனம் செய்தனர்.

மேலும் சர்வதேச யோகா தினத்தையொட்டி அருணாசலப்பிரதேச மாநிலத்தில் லோஹித்பூர் அருகே இந்திய திபெத் எல்லையோரமான  பகுதியில் பாயும் டையகுரு ஆற்றில் இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் யோகாசனம் செய்தனர். மேலும் எல்லை பாதுகாப்பு படையின் 9வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த ஆண், பெண் வீரர்கள் ஆற்றில் இடுப்பளவிற்கு நீர் செல்லும் பகுதியில் நின்று யோகாசனத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து மோப்ப நாய்களும் யோகாசனங்களை செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  

இதையடுத்து எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ திபெத்திய காவலர்கள் ரோட்டாக்கில் அதிகாலையில் உறைபனி மீது அமர்ந்து யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர். மியான்மர் எல்லையில் லேசான மழை மற்றும் மோசமான வானிலையில் அசாம் ஆயுதப்படை காவலர்கள், மத்திய சிறப்பு காவல் படையினர் மற்றம் பொதுமக்கள் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: