வாஷிங்டன்: வானத்தில் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் நிலா தெரியும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டு முறை ‘பிளட் மூன்’ எனப்படும் ரத்த சிவப்பு நிலா தோன்றியது. கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி மற்றும் ஜூலை 27ம் தேதி இந்த ‘பிளட் மூன்’ வானத்தில் தோன்றியது. இந்நிலையில் இந்த ஆண்டு வானத்தில் “ஸ்ட்ராபெர்ரி’” நிலா தோன்றும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு நாட்களுக்கு வானத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி’ நிலவு தோன்றும். இதை ‘பிளட் மூனு’டன் ஒப்பிட வேண்டாம். சில இடங்களில் நிலவு சிவப்பாய் ஒளிரும். மேலும் சில இடங்களில் ‘பிங்க்’ நிறத்தில் நிலவு காணப்படும்.