கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தண்ணீர் பிரச்சனையால் மாற்றுத்திறனாளிகளின் கழிவறைகள் மூடல்

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தண்ணீர் பிரச்சனையால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் என்றாலே ஒரு குறுகிய மனப்பான்மையுடன் பார்க்கும் மனநிலை இங்கு பலருக்கு உள்ளது. இதை தொடர்ந்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்தவொரு சலுகைகளும் அவர்களுக்கு சென்று சேர்வதில்லை. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொறுத்த வரையில் இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் கழிவறைகள் எப்பொழுதும் பூட்டியே கிடக்கின்றன.

இதுகுறித்து சில மாற்றுத்திறனாளிகளிடம் கேட்ட போது இந்த கழிப்பிடங்கள் தங்களுக்கு முறையாக பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்றும், மேலும் மற்றவர்கள் பயன்படுத்துகின்ற காரணத்தினால் கழிவறைகள் பூட்டியே கிடக்கின்றன எனவும் இதை தொடர்ந்து கழிவறைகள் சரிவர சுத்தம் செய்யப்படுவதில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொறுத்த வரை இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் நாள் ஒன்றிற்கு பயணம் செய்கின்றனர். அதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் 3 சதவீதத்திற்கும் அதிகமானோர் இங்கிருந்து பயணம் செய்கின்றனர். ஆதலால் இவர்களுக்கு முறையான கழிப்பிடம் வழங்க வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: