கடனில் சிக்கிய அனில் அம்பானி சீனாவில் ரூ.14,650 கோடி கடன்பாக்கி: நெருக்க துவங்கி விட்டன வங்கிகள்

புதுடெல்லி: கடனில் தத்தளிக்கும் ரிலையன்ஸ் கம்பெனியின் அதிபர் அனில் அம்பானி, ₹14,650 கோடி கடன்பாக்கியை உடனே வழங்க  வேண்டும் என சீன வங்கிகள் நெருக்க ஆரம்பித்து விட்டன.  அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு இந்தியாவில் கடன் பாக்கி இருந்தது. இதை உடனே கட்ட கோர்ட் உத்தரவிட்டது. தம்பியின் ரிலையன்ஸ் கம்பெனியை எடுத்து கொண்டு அந்த சொத்துக்கு ஈடாக 17,300 கோடி ரூபாய் தர சம்மதித்தார் முகேஷ் அம்பானி. ஆனால், செபி உட்பட பல்வேறு அரசு அமைப்புகளின் நடைமுறைகளில்  சிக்கல் காரணமாக, இன்னும் முழுமையாக கடன் அடைக்கப்படவில்லை.  

Advertising
Advertising

இந்த நிலையில், சீனாவில் இருந்து வங்கிகள் தங்களுக்கு அனில் அம்பானி ₹14,650 கோடி பாக்கி வைத்துள்ளார். அதை உடனே அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. சீன வளர்ச்சி வங்கிக்கு மட்டும் ₹9,860 கோடி, சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் ₹3,360 கோடி  கடன் பாக்கி வைத்துள்ளார். வர்த்தக மற்றும் தொழில் வங்கியிடம் 1,554 கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளது. அனில் அம்பானி கடந்த 13ம் தேதி கணக்குப்படி, 7 பெரிய வங்கிகள், நிறுவனங்களிடம் கடன் பாக்கி வைத்துள்ளார். அதில், சீனாவில் உள்ள கடன் பாக்கி மட்டும் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: