சுட்டெரிக்கும் வெயில் அள்ளுது ஏசி விற்பனை

புதுடெல்லி:  தமிழ்நாடு மட்டுமல்ல, பல வட  மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், ஏசி விற்பனை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மத்தியில் வரை ஏசி விற்பனை மந்தமாக தான் இருந்தது. அதன் பின் தான்  விற்பனை அதிகரிக்க துவங்கியது. சில நிறுவனங்களில் ஏசி சாதனங்கள் பற்றாக்குறையாக இருக்கும் அளவுக்கு விற்பனை அதிகமாக உள்ளது. ஏப்ரல்,  மே மாதங்களில் வழக்கத்ைத விட இரு மடங்குக்கு மேல் விற்பனை ஆகி உள்ளன என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ‘எங்களிடம் 8 ஆயிரம் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளனர். பல்வேறு மின் சாதனங்களை அவர்கள் தயார் செய்வதில் பங்கெடுக்கின்றனர். ஆனால், ஏசி விற்பனை அதிகரித்ததை அடுத்து, அவ்வளவு பேரையும் ஏசி தயாரிப்புக்கு தான்  பயன்படுத்தி வருகிறோம்’ என்ற எல்ஜி நிறுவன துணை தலைவர் விஜய் பாபு கூறினார்.
Advertising
Advertising

சூழ்நிலையை ஆராய்ந்து நாங்கள் கடந்த பிப்ரவரி மாதமே  அதிக அளவில் ஏசி சாதனங்களை இருப்பு வைத்து விட்டோம். திட்டமிட்டு செய்ததால் எங்களுக்கு ஏசி விற்பனையில் எந்த தொய்வும் இல்ைல. இதுவரை எங்களுக்கு கடந்த இரு  மாதமாக 40 சதவீதம் அளவுக்கு அதிகமாக ஏசி சாதனங்கள் விற்பனை ஆகி உள்ளன’ என்று வோல்டாஸ் நிர்வாக இயக்குனர் பிரதீப் பக்‌ஷி கூறினார். ஜப்பானின் பானாசோனிக் பிராண்ட் ஏசியும் சந்தையில் விற்பனையில் விறுவிறுப்பாக இருந்தது. ஹேவல்ஸ் பிராண்டு ஏசியை தயாரிக்கும் லாயிட் நிறுவன தலைவர் சசி அரோரா கூறுகையில், கடந்த மார்ச் முதல் ஜூன் வரை ஏசி விற்பனை  மிக அதிகமாக உள்ளது. 90 சதவீதம் பேர் ஏசி கேட்டு தான் வருகின்றனர்’ என்று தெரிவித்தார்.

Related Stories: