* இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்கள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், பிளாக்கில் வாங்க ரசிகர்கள் அலைமோதுகின்றனர். பிரிமியம் பாக்ஸ் இருக்கைக்கு ₹4.4 லட்சம் வரையும், அதற்கடுத்த ஸ்பெஷல் கேலரிக்கு ₹2.2 லட்சம் வரை கொடுக்கவும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாதாரண வகுப்பு டிக்கெட்டுக்கும் மூன்று மடங்கு விலை சொல்கிறார்களாம்.
* இந்த போட்டியின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் பெட் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெட்டிங்குக்கு அனுமதி இல்லை என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.