சாரா சாண்டர்ஸ் பதவி விலகுகிறார் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளில் சாரா சாண்டர்சும் ஒருவர். வெள்ளை மாளிகையில் கடந்த 2017, ஜூலை முதல் ஊடக செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர், குடியரசுக் கட்சியின்  மூத்த தலைவரும், ஆர்கன்சாஸ் மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான மைக் ஹக்பியின் மகளாவார். இந்நிலையில், இவர் இம்மாத இறுதியில் பணியில் இருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். சாரா சாண்டர்ஸ் கூறுகையில், ``அதிபர் டிரம்ப், அவரது அதிகாரிகள் குழுவினரை மிகவும் நேசிக்கிறேன். வெள்ளை மாளிகையில் பணியாற்றியதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இதை என் வாழ்நாளில் கிடைத்த அரிய வாய்ப்பு  என்று கூறுவேன்,’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: