தென்தாமரைக்குளம் : தென்தாமரைக்குளம் அருகே கீழமணக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை மற்றும் மின்வெட்டால் தும்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கீழமணக்குடி கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து கரையை மோதி வந்தன. இதனால் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பழையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர் கீழமணக்குடி கடலில் வீணாக கலந்து வருகிறது. பொதுவாக கோடைக்காலங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொது மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த கோடையிலும் பல நீர்நிலைகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.
