உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்...

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோர கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

Advertising
Advertising

இதன் முக்கிய அம்சங்கள்...

* சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம்

* சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்

* கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

* பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

கல்வி எனும் செல்வம் பெற்று வளர்ந்து செழித்து மிளிரவேண்டிய பருவத்தில், வேலை பளுவினை சுமந்து நிற்கின்ற குழந்தைகளை, குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தை பருவத்தினையும், முறையான கல்வியினையும் உறுதி செய்வதே தமிழக அரசின் அடிப்படை குறிக்கோளாகும். குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக தடை செய்து, அதனை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

Related Stories: