சென்னை: பெண்கள் லீக் கிரிக்கெட் அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு முகாம் ஜூன் 15, 16 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அளவில் 2019-20ம் ஆண்டு பெண்கள் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்காக வீராங்கனைகள் தேர்வு முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. யு16 அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு ஜூன் 15ம்தேதி காலை 7 மணிக்கு நடைபெறும். வீராங்கனைகள் 1-9-2003 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.