தி.மலையில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவருக்கு எச்ஐவி. ரத்தம் ஏற்றம்? மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் மனு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவருக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக கூறி அவரது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி வெள்ளச்சியம்மாள். இவர்களுக்கு 19 வயதுடைய ஒரு மகன் இருக்கிறான். இவர் வாய் பேச முடியாத ஒரு மாற்றுத்தினாளி. இந்நிலையில் மாற்றுத்திறனாளி மகனுக்கு எப்பொழுதெல்லாம் சரி இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் அதே ஊரை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரான செல்வகுமார் என்பவர் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இதே போல் சிகிச்சை அளித்த செல்வகுமார் எச்ஐவி ரத்தத்தை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கை வீக்கமடைந்துள்ளது. இதனை கண்ட பெற்றோர்கள் விசாரித்த போது செல்வகுமார் வந்து ஊசி போட்டதாக சைகையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அந்த வீக்கத்தை நீக்க ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ரத்த பரிசோதனை செய்த போது அவரது உடலில் எச்ஐவி பாதித்த ரத்தம் கலந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக செல்வகுமாரிடம் கேட்டபோது மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்போதே அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுவரை புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றான். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் செல்வகுமாருக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், தனது மகனை காப்பாற்றி தர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: