துபாயில் நடந்த விபத்தில் இறந்த 10 பேர் உடல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது

துபாய்: துபாயில் பேருந்து விபத்தில் இறந்த 10 இந்தியர்களின் உடல்கள் நேற்று காலை இந்தியா அனுப்பி வைக்கப்பட்டது. 22 வயது வாலிபரின் உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது. ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து கடந்த 6ம் தேதி துபாய் சென்ற சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானது. ராஷியா என்ற இடத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்த பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் 17 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள். விபத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை சொந்தநாட்டுக்கு அனுப்பும் பொறுப்பை இந்திய தூதரகம் ஏற்றது.

அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர் இறந்தவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு நேற்று அதிகாலை இந்தியா அனுப்பி வைக்கப்பட்டது. அதிகாலை 3.39 மணிக்கு ஏர்இந்தியா விமானத்தில் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றுக்காக ஏர் இந்தியா எந்த கட்டணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. விபத்தில் இறந்தவர்களில் ஒருவரான ரோஷ்னி மூல்சந்தானி (22) என்ற சமூக சேவகரின்  உடல் மட்டும் அங்கேயே தகனம் செய்யப்பட்டது. விபத்தில் மகன் இறந்த செய்தி அறிந்தவுடன் அவரது பெற்றோர் துபாய் விரைந்தனர். அவர்களது விருப்பத்தின்பேரில் ரோஷ்னி உடல் நேற்று முன்தினம் அங்கேயே தகனம் செய்யப்பட்டது.

Related Stories: