ரசிகரிடம் முறைகேடாக நடந்ததற்காக பாதுகாவலருக்கு சல்மான் கான் பளார்: வீடியோ வைரலானது

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது பாதுகாவலர் ஒருவரை கன்னத்தில் அறையும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சல்மான் கான் நடித்த ‘பாரத்’ திரைப்படம் ரம்ஜான் நாளில் வெளியானது. மும்பையின் லோயர் பரேலில் உள்ள மல்டிப்ளக்ஸ் தியேட்டர் ஒன்றில் பாரத் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதை பார்ப்பதற்காக சல்மான் கான் வந்தார். அப்போது ரசிகர் கூட்டம் திணறியடித்தது. பாதுகாவலர்கள் அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அப்போது ஒரு பாதுகாவலர், சல்மான் கானை பார்ப்பதற்காக முயலும் ஒரு குழந்தை ரசிகரிடம் அநாகரீகமாக நடந்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சல்மான் கான், அந்த பாதுகாவலர் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி இருக்கிறது. நெட்டிசன்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அவர்களில் சிலர் சல்மான் கானை பாராட்டுகிறார்கள். ஆனால் சிலர் சல்மான் கான் அகந்தையுடன் நடந்து கொண்டதாக குறைகூறி வருகிறார்கள்.

Related Stories: