உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் சுத்தம் செய்த கடலோர காவல் படை வீரர்கள்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடலோர காவல் வீரர்கள் கடலுக்கு அடியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் 500 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, உலகம் முழுவதும் நேற்று சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. கடலின் இயற்கையை பாதுகாப்பது கடலோர காவல் படையின் பொறுப்பாகும். அதன்படி, கடலோர காவல்படை கிழக்கு மண்டலம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, கடலோர காவல்படை டைவ் இந்தியா அமைப்புடன் இணைந்து கடலுக்கு அடியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது. முதல் முறையாக கோவளம் கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் நீர் மூழ்கி வீரர்கள் கடலுக்கு அடியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் 500 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன.

Related Stories: