ஆந்திராவில் ஒரே நாளில் 50 ஐஏஎஸ்.கள் இடமாற்றம்: முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி

திருமலை: ஆந்திராவில் 9 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 50 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நள்ளிரவில் அதிரடியாக உத்தரவிட்டார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற ஒரு வாரத்தில் முதல்வரின் தனிச்செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசில் முக்கிய பதவி வகித்து வந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 50 பேரை இடமாற்றம் செய்து முதல்வர் ஜெகன்மோகன் நேற்று முன்தினம் நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார். இதில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக வெங்கடேஸ்வர பிரசாத், நிதித்துறை செயலாளர் நீரத்குமார் பிரசாத், நீர்ப்பாசனத்துறை செயலாளராக ஆதித்யநாத் தாஸ், வேளாண்துறை செயலாளராக பூனம், பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய சிறப்பு செயலாளராக கரிகால வல்லவன், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளராக ஜவகர்ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  

மேலும், வீட்டுவசதித்துறை செயலாளராக அனந்தராமு, இளைஞர் நல மேம்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்கு பிரவீன்குமார், கல்வித்துறை ராஜசேகர், போக்குவரத்து துறை சாலை மற்றும் கட்டிட துறை செயலாளர் கிருஷ்ணபாபு, குழந்தைகள் நலத்துறை தயா மந்த்தி, நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சியாமள ராவ், மின்சார துறை (பிரான்ஸ்கோ) நிர்வாக இயக்குநராக ஸ்ரீகாந்த் ஆகியோரும், எஸ்சிஎஸ்டி நலவாரியத்துறை செயலாளராக என்.கே மீனா, மின்சார உற்பத்தி(ஜென்கோ) ஸ்ரீதர், உணவுத் துறை ஆணையாளராக கோனா சசீதர், உள்துறை செயலாளர் கிஷோர்குமார், விவசாயத்துறை சிறப்பு செயலாளராக மதுசூதன்ரெட்டி, மார்க்கெட்டிங் துறை ஆணையராக சித்தூர் மாவட்ட கலெக்டராக உள்ள பிரத்யும்னா நியமிக்கப்பட்டுள்ளார்.  சித்தூர் மாவட்ட கலெக்டராக நாராயண பரத் குப்தா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். முதல்வர் சிறப்பு அதிகாரி முரளி, சிஆர்டிஏ கூடுதல் ஆணையாளராக விஜயா, போக்குவரத்து ஆணையாளராக ஆஞ்சநேயலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், விசாகப்பட்டினம் கலெக்டராக வினய் சந்த், நெல்லூர் கலெக்டராக சேஷகிரி ராவ், கிழக்கு கோதாவரி மாவட்ட கலெக்டராக முத்தியால் ராஜ், கர்னூல் கலெக்டராக வீரபாண்டியன், குண்டூர் கலெக்டராக சாமுவேல் ஆனந்த், மேற்கு கோதாவரி மாவட்ட கலெக்டராக முரளிதர் ரெட்டி, அனந்தப்பூர் கலெக்டராக சத்தியநாராயணா, பிரகாசம் கலெக்டராக பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: