கூடங்குளம் முதல் அணு உலையில் உற்பத்தி நிறுத்தம்

வள்ளியூர்: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்ய உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த நவம்பர் 19ம் தேதி முதலாவது அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பராமரிப்பு பணிகள் முடிந்து 7 மாதங்களுக்குப் பின் கடந்த மே 18ம் தேதி அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலோடு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் நீராவி இன்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரண்டாவது அணு உலையில் தொடர்ந்து மின் உற்பத்தி நடந்து வருகிறது.

Related Stories: