பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஜோகன்னா கோன்டா

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இங்கிலாந்து வீராங்கனை ஜோகன்னா கோன்டா தகுதி பெற்றார்.கால் இறுதியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் (7வது ரேங்க்) நேற்று மோதிய கோன்டா (26வது ரேங்க்), அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து முன்னேறிய கோன்டா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிக்கு  தகுதி பெற்றார்.

இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் ஹங்கேரியின் டிமியா பாபோஸ் - கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்) ஜோடி 3-6, 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் - ஷுவாய்  ஸாங் (சீனா) வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

Related Stories: