கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை : கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில், இருவரும் கோயிலுக்கு சென்றபோது 2015 ஜூன் 23-ஆம் தேதி மாயமானார். இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் பிணமாக கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 15 பேர் மீது நாமக்கல் சிபிசிஐடி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் யுவராஜ் உள்பட 15 பேர் விசாரணைக்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு  ஒத்திவைத்தது மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: