மத்திய அமைச்சர்களாக ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் இன்று பொறுப்பேற்பு

டெல்லி : மத்திய அமைச்சர்களாக ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோர் இன்று  பொறுப்பேற்றுக்கொண்டனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து, நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பிரதமர் மோடி  பதவியேற்றார். தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக மக்களவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்கிறார். இந்நிலையில் அமைச்சராக ஸ்மிருதி இரானி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் மத்திய சட்டத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்ச ராக வி.கே.சிங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோரும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related Stories: