புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து தேர்வு: நாளை பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இதையடுத்து அந்த பதவி காலியாக உள்ளது. இதையடுத்து, சட்டசபை நாளை காலை 9.30 மணிக்கு கூட்டப்படுவதாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் நேற்று அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர்கள் பங்கேற்றுள்ளனர். துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் சிவக்கொழுந்து ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். லாசுப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான சிவக்கொழுந்து இதற்கு முன் துணை சபாநாயராக இருந்தார். நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்.

Related Stories: