நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் : லண்டன் விசாரணைைய ஒத்திவைத்தது நீதிமன்றம்

லண்டன்: வைர வியாபாரி நிரவ் மோடி மீதான வழக்கில் குற்றச்சாட்டு குறிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய 8 வாரங்கள் தேவை என்று இந்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகிய இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில், இவர்களை பிடிக்க சிபிஐ, அமலாக்கத்துறை சர்வதேச போலீசான இன்டர்போலின் உதவியை நாடின. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் சமீபத்தில் நிரவ் மோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் ஆர்புத்நாட், நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டுகள் குறிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

நாடு கடத்தப்பட்டால் எந்த சிறையில் அடைக்கப்படுவார் என்பது பற்றிய விவரத்தை 14 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இதுபற்றிய விவரத்தை  நீகிமன்ற உத்தரவுப்படி தெரிவிப்பதாக இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வர்ட் மார்ட்டின் உறுதி அளித்தார். நிரவ் மோடியின் காவலை ஜூன் 27ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். நிரவ் மோடி மீதான நாடு கடத்தும் வழக்கு விசாரணை முடிந்து அவரை இந்தியா கொண்டுவரும் வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

* வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு  கடத்தும் வழக்கு விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த  வழக்கை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட்  எம்மா ஆர்புத்நாட், நிரவ் மோடி மீதான  மோசடி குற்றச்சாட்டுகள் குறிப்பு அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல்  செய்ய இந்திய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை ஜூலை  29க்கு ஒத்திவைத்தார்.

* வழக்கு விசாரணைக்கு வரும்போது, வழக்கை விரைந்து விசாரிக்க வசதியாக தேதியை நிர்ணயம் செய்து அறிவிப்பேன் என்றும்  நீதிபதி ஆர்புத்நாட் தெரிவித்துள்ளார்.

Related Stories: