உலக செரிமான தினத்தை முன்னிட்டு ஜெம் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான ஜெம் மருத்துவமனை சார்பில் உலக செரிமான தினத்தை முன்னிட்டு லேப்ரோஸ்கோபிக், ரோபோடிக் சிகிச்சை மற்றும் இரைப்பை சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஆரோக்கியா மருத்துவமனை சித்த மருத்துவர் ஜி.சிவராமன் கலந்துகொண்டு ‘வயிறே நலமா?’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ஜெம் மருத்துவமனை மருத்துவர் பிரவீன் ராஜ், ‘உணவும், குடலும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு உடல் ஆரோக்கியம் தொடர்பான சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை கேட்டு பெற்றனர். இதுகுறித்து ஜெம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் பழனிவேலு கூறுகையில், ‘‘செரிமானம் சம்பந்தமான, புற்றுநோய் பாதிப்புக்கான அறிகுறிகளை தாமதப்படுத்தாமல் கண்டறிய வேண்டும். நோய்க்கான சிகிச்சை எவ்வளவு முக்கியமோ அதேபோல் நோய் வரும் முன்பாக காப்பதும் மிகவும் முக்கியமாகும்’’ என்றார்.

Related Stories: