அஸ்தானா லஞ்ச வழக்கில் சிபிஐ.க்கு விசாரணையை முடிக்க 4 மாதங்கள் அவகாசம் : நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:. சிபிஐ  முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா. ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர்,  ராகேஷ் அஸ்தானா தன்னிடம் லஞ்சம் பெற்றதாக புகார் கொடுத்தார். இதனையடுத்து இவர் மீது சிபிஐ வழக்கு பதிந்தது. மேலும், இவருக்கு உதவியதாக டிஎஸ்பி தேவந்திர குமார், இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 11ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10 வாரத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் சிபிஐ.க்கு உத்தரவிட்டது.

நீதிமன்றம் அளித்த இந்த அவகாசம் முடிந்த நிலையில்,  கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி முக்தா குப்தா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, 3 பேர் மீதான விசாரணையை முடிப்பதற்கு சிபிஐ.க்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: