காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவரின் வீட்டில் 12 சவரன் கொள்ளை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (48). இவர், நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கினார். நேற்று காலை கண்விழித்து பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோ திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த 12 சவரன் நகைகள் ₹20 ஆயிரம், அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கார் திருட்டு: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் உமாபதி (27). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர், உறவினர் வீட்டு சுப  நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் குடும்பத்துடன் காரில் மயிலாப்பூர் வந்தார். பின்னர், அவரது காரை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ரோசரி பள்ளி அருகே நிறுத்தினார். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டபோது, அவரது கார் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உமாபதி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: