திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை நடைபெறும். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் நேற்று திருமலை சென்றார். இரவு வராகசாமி, ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை அஷ்டதள பாதபத்ம ஆராதனை சேவையில் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். தமிழக சட்டசபையில் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடத்தில் வெற்றி பெற்று 122 இடங்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Related Stories: