ஆட்சி மாற்றத்தால் திருப்பதி ‘டிவி’ தலைவர் ராஜினாமா

திருமலை: ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சி தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திருப்பதி எழுமலையான் கோயில் சார்பில் வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. இந்த தொலைக்காட்சிக்கு தலைவராக திரைப்பட தயாரிப்பாளர் கே.ராகவேந்திரராவ் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார்.

2015ம் ஆண்டு முதல் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த ராகவேந்திரராவ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்தான தொலைக்காட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியை வைத்துக் கொண்டு ராகவேந்திரா ராவ் தொலைக்காட்சி முதன்மை செயல் அதிகாரி துணையோடு பல கோடி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்தநிலையில் தற்போது ஆட்சிமாற்றம் நடைபெற்றுள்ள நிலையில் ராகவேந்திரராவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அவர் வயது மூப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இன்று தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் நடைபெற உள்ளது. புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில் அறங்காவலர் குழு கூட்டம் இன்று கடைசி கூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: