நாளை நடைபெறவுள்ள காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு திட்டம்

புதுடெல்லி: நாளை நடக்கும் காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் காவிரி ஆணைய கூட்டம் மசூத் உசேன் தலைமையில் நாளை நடைபெறுகிறது. அதில் மேகதாதுவில் கர்நாடக அணை கட்டக் கூடாது என உத்தரவிட கோரி ஆணையக்கூட்டத்தில் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் காவிரி ஆணையத்தில் முதன்முறையாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்துக்கான ஜூன் மாத காவிரி நீர் 9.19 டிஎம்சியை திறந்து விடவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.

Related Stories: