தென் கொரியாவுடன் மகளிர் ஹாக்கி 2வது போட்டியிலும் போராடி வென்றது இந்தியா

ஜின்சியான்: தென் கொரிய அணியுடனான மகளிர் ஹாக்கி 2வது டெஸ்டில், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று அசைக்க முடியாத முன்னிலை பெற்றது.தென் கொரியா சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜின்சியானில் நடந்த முதல் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்திய இந்தியா, 2வது டெஸ்டில்  நேற்று மோதியது.மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், இந்திய அணி மீண்டும் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது.

Advertising
Advertising

 கொரிய வீராங்கனை செயுங்ஜு 19வது நிமிடத்தில் கோல் போட்டு அதிர்ச்சி அளித்த நிலையில், இந்திய அணி சார்பில் கேப்டன் ராணி ராம்பால் 37வது நிமிடத்திலும், நவ்ஜோத் கவுர் 50வது நிமிடத்திலும் அபாரமாக கோல் அடித்து வெற்றிக்கு  உதவினர்.

இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், சம்பிரதாயமான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது.

Related Stories: