உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 4 பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி நீதிபதிகள் ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 27 பேராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31 பேராக உயர்ந்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது பணியைத் தொடங்கியவர் அனிருத்தா போஸ், இவர் தற்போது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.

தேசிய அளவில் நீதிபதிகளுக்கான பதவி மூப்பு பட்டியலில் 12-ஆவது இடத்தில் அவர் உள்ளார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது பணியைத் தொடங்கியவர் ஏ.எஸ்.போபண்ணா, இவர் தற்போது கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். தேசிய அளவில் நீதிபதிகளுக்கான பதவி மூப்பு பட்டியலில் அவர் 36-ஆவது இடத்தில் உள்ளார்.  நீதிபதி கவாய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், நீதிபதி சூரியகாந்த், இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

Related Stories: