சிட்னி: பார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார். நிக்கி லவுடா உடல் நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இவர் மூன்று முறை பார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 1975 ஆண்டு பார்முலா ஒன் கார் பந்தையத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இவருக்கு 1976-ஆம் ஆண்டு விபத்திற்கு பிறகு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. அந்த விபத்தின் போது அவரது ஃபெராரி கார் கடும் சேதமடைந்ததுடன், அவருக்கும் எழும்பு முறிவு, தீக்காயம் உட்பட உடலில் பல்வேறு விதமான காயங்கள் ஏற்பட்டன.