தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர விசாரணை

சென்னை : சென்னை தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், வந்த கடிதத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தையும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, செய்து வருகிறார். தற்போது வாக்கு எண்ணிக்கைகான ஏற்பாட்டு பணிகளில் மும்மரமாக இருக்கும் அவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருக்கும் சத்ய பிரதா சாஹுவின் அலுவலகத்திற்கு வந்திருக்கும் கடிதம் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரப்பரப்பான சூழல் நிலவியது. இதனிடையே இது குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ள காவல் துறையினர், மர்ம கடிதத்தை அனுப்பிய நபரை தேடி வருகின்றனர்.  இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹு ஆலோசனை

இதனிடையே தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்ற நிலையில், வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுளள்ன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலக கூட்ட அரங்கில் காணொளி காட்சி மூலம் இந்த ஆலோசனை நடைபெற்றது.

Related Stories: