சில்லி பாயிண்ட்...

* ‘மகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் அவளை மருத்துவமனையில் சேர்த்து, காலை 8.00 மணி வரை தூங்காமல் விழித்திருந்த பிறகு வீட்டுக்குத் திரும்பினேன். இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி எழுந்து நேரடியாக ஸ்டேடியத்துக்கு வந்து சதம் விளாசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல, எனது குடும்பத்துக்கும் ரொம்பவே ஸ்பெஷல்’ என்று இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

* ஸ்லோவேனியா சர்வதேச பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் மினோரு கோகாவுடன் மோதிய சவுரவ் வர்மா 21-17, 21-12 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.

* உலக கோப்பை தொடரின் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம் ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை. பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடியதால், நன்கு ஓய்வெடுத்துக் கொண்டு இங்கிலாந்து செல்லத் தயாரானால் போதும் என்று கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: