நேபாளம் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு... கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

காத்மாண்டு: நேபாளம் நாட்டில் இன்று பிற்பகல் லேசானது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் சரியாக 1.53 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளயினர். நேபாள தலைநகர் காத்மாண்டூவில் இருந்து மேற்கு நோக்கி 66 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதோடு, வீடுகளில் இருந்த பொருட்களும் உருண்டன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக எந்தவித பொருள் சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் எற்பட்ட நிலநடுக்கத்தில் 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 22,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் நேபாள அரசு பேரிழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, கடந்த வருடம் டிசம்பர் மாதம் நேபாளம் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியிருந்தது. காத்மாண்டுவில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள சிந்துபால்சவூக் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக ஏற்பட்டதாக கூறப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: