ஓட்டுநர் பார்த்த ‘படத்தால்’ லண்டன் நகர ரயிலில் பயணிகள் தர்மசங்கடம்

லண்டன்:  லண்டனில் மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்துவதில் பிரதான இடம்பெற்றுள்ளது ரயில்தான். இந்நிலையில் தென்மேற்கு ரயில்வேயில் சமீபத்தில் ஓட்டுனரின் அலட்சியத்தால் ஒரு அநாகரீக சம்பவம் அரங்கேறி பயணிகளை அவதிக்குள்ளாகி உள்ளது. ரயிலை ஓட்டிய இயக்குனர், தனது கேபினில் உள்ள கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்தப்படி இயக்கியுள்ளார். இந்த கம்ப்யூட்டர் ரயிலில் உள்ள பொது அறிவிப்பு ஸ்பீக்கருடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதனால் ஓட்டுனர் கேபினில் உள்ள கம்ப்யூட்டரில் வரும் ஒலிகள் பொது ஸ்பீக்கரிலும் கேட்கும்.

Advertising
Advertising

இந்நிலையில் ஓட்டுனர் ஆபாச படம் பார்த்தபோது எழுந்த உரையாடல்களும் பொது அறிவிப்பு ஸ்பீக்கரில் கேட்டுள்ளது. திடீரென ஆபாச பட டயலாக்குகளை கேட்ட பயணிகள் ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழித்துள்ளனர். இதனால் அவர்கள் சங்கோஜத்தில் நெளிந்தனர்.

Related Stories: