அமெரிக்காவுடன் ஈரான் விரைவில் பேச்சுவார்த்தைக்கு முன்வரும்: டொனால்டு டிரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: ஈரான் விரைவில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே ஈரானுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். ஈரானுடனான பன்னாட்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இதனால் ஈரான் அமெரிக்கா இடையேயான மோதல் முற்றியது.

Advertising
Advertising

இந்த சூழலில் ஈரான் விரைவில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரான் விவகாரத்தில் அதிகாரிகளின் கருத்துக்களுக்கு டிரம்ப் முக்கியத்துவம் அளிப்பதில்லை என தகவல் வெளியான நிலையில், டிரம்ப் அதனை மறுத்துள்ளார். முன்னதாக அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். 

Related Stories: