வாட்ஸ் அப் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதால் வாட்ஸ் அப்-ஐ உடனடியாக அப்டேட் செய்ய வாட்ஸ்அப் நிறுவனம் பரிந்துரை

டெல்லி: வாட்ஸ் அப் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதால் வாட்ஸ் அப்-ஐ உடனடியாக அப்டேட் செய்யுமாறு தனது பயனாளர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள், ஊடுருவ முயன்றதோடு, தொடர்ந்து முயற்சி மேற்கொண்டி இருப்பதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் கூறியிருக்கிறது. ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் இயங்கும் வாட்ஸ் அப்-ன், வாய்ஸ் கால் மூலம் ஹேக்கர் ஊடுருவுவதாக தெரிவித்திருக்கிறது.

அவ்வாறு நமக்கு வாட்ஸ் அப் கால் வரும்போது ஹேக்கர்களின் கண்காணிப்பு மென்பொருள் தானாகவே செல்போனில் இன்ஸ்டால் செய்யப்படுவதாக கூறியிருக்கிறது. இவ்வாறு இன்ஸ்டால் செய்யப்படும் சாப்ட்வேர் மூலம் ஸ்மார்ட்போன்களை ஹேக்கர்கள் கண்காணிப்பதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எனவே ஹேக்கர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாட்ஸ் அப் செயலியை உடனடியாக அப்டேட் செய்யுமாறு வாட்ஸ்அப் கேட்டுக்கொண்டிருக்கிறது.

Related Stories: