வெளிநாட்டு நிதி பெறுவதில் மோசடி: இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனின் உரிமத்தை ரத்து செய்தது உள்துறை அமைச்சகம்

டெல்லி: வெளிநாட்டு நிதி பெறுவதில் மோசடி செய்ததாக இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் உரிமத்தை உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் கல்வி, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், கலை மற்றும் பண்பாடு, ஆதரவற்றோர் காப்பகங்கள் போன்ற களப்பணிகளை ஆற்றி வருகிறது.

இதற்கிடையே, என்ஜிஓ என அழைக்கப்படும் அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதி குறித்து முறையாக அறிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐ.டி., சேவைகள் நிறுவனமான இன்ஃபோசிஸ் கீழ் செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் கடந்த 6 வருடங்களாக வெளிநாட்டு நிதி எவ்வளவு வந்தது, எதற்காகச் செலவு செய்யப்பட்டது என்று அரசுக்குக் கணக்கு காண்பிக்காமல் வந்துள்ளது. இந்நிலையில், இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் விளக்கம்:

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2016-ன் கீழ் வெளிநாட்டு நிதி குறித்த நாங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. இது குறித்து உள்துறை அமைச்சகத்திற்குத் தக்க முறையில் விளக்கம் அளித்துள்ளோம். மீண்டும் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் உரிமத்தை அளிக்க உறுதி அளித்துள்ளார்கள் என்று இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: