சில்லி பாயிண்ட்...

* காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் காகிச்போ ரபாடா, ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியுடன் ஜூன் 5ம் தேதி நடக்க உள்ள லீக் ஆட்டத்துக்கு முன்பாக முழு உடல்தகுதி பெற்றுவிடுவார் என அணி மருத்துவர் முகமது மூசாஜீ நம்பிக்கை தெரிவித்துள்ளார். காயம் அடைந்துள்ள மற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் டேல் ஸ்டெயின், லுங்கி என்ஜிடி களமிறங்குவது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இவர்கள் இருவரும் உலக கோப்பை தொடருக்காக இங்கிலாந்து பயணமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

* சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில் ஜப்பானில் நடைபெறும் உலக ரிலே சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 4X100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், பலம் வாய்ந்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளை பின்னுக்குத்தள்ளி பிரேசில் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

* டென்மார்க் சர்வதேச சேலஞ்ச் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்திய வீரர் சுபாங்கர் தே 21-17, 13-21, 10-21 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியன் சோல்பெர்கிடம் போராடி தோற்றார். இரட்டையர் பிரிவு அரை இறுதியிலும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி  இணை தோல்வியைத் தழுவியது.

* ஆஸ்திரேலியாவில் நடைபெற பிக் பாஷ் டி20 லீக் தொடரின் புதிய சீசனில் இருந்து அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் (தென் ஆப்ரிக்கா) விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 12வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 13 லீக் ஆட்டத்தில் விளையாடிய அவர் 442 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: