மூத்த வீரர்களால் கடுமையாக நடத்தப்பட்டேன்: பாக். வீரர் சாகித் அப்ரிடி புகார்

* நான்தான் சாட்சி: முன்னாள் வீரர் சோயிப் அக்தர்

இஸ்லாமாபாத், மே 10:  பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரர்களால்  கடுமையாக நடத்தப்பட்டதாக சாகித் அப்ரிடி தெரிவித்திருப்பது கொஞ்சமதான்’ என்று முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி தனது ‘தி கேம் சேஞ்சர்’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் இந்திய வீரர் கவுதம் கம்பீரை ‘மனநிலை சரியில்லாதவர்’ என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் டென்டுல்கர்  தந்த பேட் மூலம் சதமடித்ததையும் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த புத்தகத்தில் இருக்கும் இன்னொரு தகவலும் இப்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பாகிஸ்தான் மூத்த வீரர்கள் தன்னை கடுமையாக நடத்தியதாக புத்தகத்தில் அப்ரிடி தெரிவித்துள்ள தகவல்கள்தான்.

குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பயற்சியாளருளான ஜாவீத் மியான்தத், ‘என்னை அணியினருடன் பயற்சி பெற அனுமதிப்பதில்லை. அதனால் நான் தனியாக பயிற்சி பெறுவேன். பரிசளிப்பு விழாகளில் அவரை புகழ்ந்து பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார். அணியில் எனக்கு எதிரான மனநிலையை அவர் உருவாக்கி  இருந்தார்’ என்று புத்தகத்தில் அப்ரிடி எழுதியுள்ளார். அது குறித்து கருத்து தெரிவித்துள்ள  ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்பட்ட முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், ‘மூத்த வீரர்கள் தன்னை கடுமையாக நடத்தப்பட்டது குறித்து புத்தகத்தில் அப்ரிடி  குறைவாகதான் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு நடந்த கொடுமைகளுக்கு நான் சாட்சியாக இருக்கிறேன்–்–்–்். சென்னையில் 1999ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் போது அப்ரிடியை  பேட்டிங் பயிற்சி பெற  ஜாவீத் மியான்தத் அனுமதிக்கவில்லை.

அதேபோல்  ஆஸ்திரேலிய பணத்தின் போது 4 மூத்த வீரர்கள் அப்ரிடியை ஒரு காலில் மட்டும் பேடு அணித்து விளையாடும்படி  கட்டாயப்படுத்தினர். கடுமையாக நடந்துக் கொண்ட 10 மூத்த வீரர்களில் 2 பேர் விளையாடும் காலத்திலேயே தங்கள் செயல்களுக்காக  மன்னிப்பு கேட்டனர்.  அவர்களில் சிலர் பல ஆண்டுகளுக்கு பிறகு ‘உம்ரா பயணம்’ மேற்கொள்வதற்கு முன்பு  மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்’ என்று தெரிவித்துள்ளார்.

 அதே நேரத்தில் இன்னொரு பாகிஸ்தான் முன்னாள் வீரர் இம்ரான் ஃபர்ஹத்  ‘ அப்ரிடி ஒரு சுயநலவாதி. தனது வயதை 20 என்று அவர் பொய் சொன்னவருக்கு சிறந்த வீரர்களை குறைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது. அதே நேரத்தில் அப்ரிடிக்கு அரசியல்வாதியாகும் தகுதி நிறைய உள்ளது  ’ என்று கூறியுள்ளார்.

Related Stories: