* இந்திய விளையாட்டு ஆணையம்(சாய்) சார்பில் சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயிற்சி மாணவர்களும், பெற்றோர்களும் கோமதிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பயிற்சியாளர்கள் மனோகரன்(ஹாக்கி), லாரெல் ஷீலாராணி(வாலிபால்), திலீப்குமார் கன்டயாட் (தடகளம்) ஆகியோர் கோமதியை பாராட்டினர்.
* சோனி நிறுவனமும், அதன் விளம்பரத் தூதரான இந்தி நடிகர் பர்ஹான் அக்தரும் இணைந்து ஐரோப்பிய சாம்பியன் போட்டியை மேலும் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக ஸ்பெயின், மாட்ரிட் நகரில் ஜூன் 1ம் தேதி நடைபெறும் போட்டியை காண நேரில் செல்கிறார் அக்தர். புது முயற்சியாக போட்டிகளை சோனி டிவியில் மட்டுமின்றி சென்னை உட்பட நாடு முழுவதுமுள்ள பிவிஆர் மால்களிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.