ஷீலா தீட்சித்தை ஆதரித்து பிரியங்கா காந்தி சாலை வழி பிரசாரம் : மலர்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் போட்டியிடும் ஷீலா தீட்சித்திற்கு ஆதரவாக பிரியங்கா காந்தி நேற்று சாலைவழி பரப்புரை மேற்கொண்டார். டெல்லியில் வரும் 12ம் தேதி 6ம் கட்டமாக வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று பிரதமர் மோடி மற்றும் காஙகிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இருவரும் ஒரே நாளில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தவரும், மாநில கட்சி தலைவருமான ஷீலாத தீட்சித் வடகிழக்கு டெல்லியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக பிரியங்கா நேற்று சாலைவழி பிரசாரத்தில் ஈடுபட்டார். மினி பஸ் ஒன்றின் மீது ஏறி நின்றவாறு பிரசாரத்தை தொடங்கினார்.

பிரியங்கா வருகையையொட்டி சாலை எங்கும் காங்கிரஸ் தொண்டர்கள் பேனர்களை வைத்து இருந்தனர். சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் சீலாம்பூர் பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா வழியெங்கும் தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்தவாறு சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கட்சி தொண்டர்கள் பிரியங்கா காந்தி பெயரை உச்சரித்து கோஷம் எழுப்பினர். பிரியங்காவை பார்ப்பதற்காக மக்கள் ஒருவரையொருவர் முண்டியத்தவாறு கூட்டநெரிசலில் நின்றனர். அவர் மீது ரோஜா பூக்களை தூவி பல இடங்களில் தொண்டர்கள் வரவேற்றனர். அதன்பின்னர் நேற்று மாலை தெற்கு டெல்லியில் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இந்த பகுதியில் சுகாதாரம் தான் மிகப்

பெரிய பிரச்னை என்றும், ஆனால், முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் தொகுதியின் சிட்டிங் எம்பியான பாஜவின் மனோஜ் திவாரி கண்டுகொள்ளவில்லை என உள்ளூர்வாசி ஒருவர் குறைபட்டு கொண்டார்.

Related Stories: