நாளை கொண்டாடப்படும் 2ம் உலகப்போரின் 74ம் ஆண்டு தினம்: ரஷ்யாவில் ராணுவ அணிவகுப்பு ஒத்திகை

மாஸ்கோ: இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வென்றதன் 74-ம் ஆண்டு நினைவு தினம் ரஷ்யாவில் நாளை கொண்டாடப்பட உள்ளது. ரஷ்யாவின் வெற்றி தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராணுவ அணிவகுப்புக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.

2-ம் உலகப்போர்;இரண்டாம் உலகப்போர் 1939-முதல் 1945 வரை நடந்தது. இதில் ஜெர்மனி  தலைமையில் இருந்த அச்சுநாடுகளை, ஐரோப்பியநாடுகள்,  சோவியத்யூனியன் இடம் பெற்றிருந்த நேசநாடுகள்கூட்டணி வெற்றி கண்டது. 1945ம் ஆண்டு ஜெர்மனியின் நாசிப் படைகளை சோவியத் ரஷ்ய படைகள் தோற்கடித்ததன் நினைவாக ஆண்டு தோறும், மே மாதம் 9ம் தேதி ரஷ்யாவில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 6 கோடி மக்களை பலிகொண்ட இந்த  போர், உலகவரலாற்றில்  முக்கியத்துவம் பெற்றதாகும். இதில் சோவியத் யூனியன் கூட்டணியில் மட்டும் 2 கோடி மக்கள் இறந்தனர்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினத்தின் போது நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில், ராணுவ அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில் நாளை ரஷ்யாவின் வெற்றி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ராணுவ அணிவகுப்புக்கான ஒத்திகை நிக்ழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் பீரங்கிகள், டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பங்கேற்று ஒத்திகையில் ஈடுபட்டன.

Related Stories: