நெய்வேலி 3வது சுரங்கத்துக்கு தடை வருமா? தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி,மே.8: நெய்வேலியில் 3வது சுரங்கம் அமைக்க தடை விதிக்க வேண்டும்  என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய சுற்றுச்சூழல்  அமைச்சகம் விளக்கமளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று நோட்டீஸ் அனுப்பி

உத்தரவிட்டுள்ளது.என்.எல்.சி 3வது நிலக்கரி சுரங்கம் அமைத்து விரிவாக்க முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி  வருகின்றனர். தற்போது மூன்றாவது சுரங்கத்திற்காக 30 கிராமங்களில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.  மேலும் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நிலக்கரி எடுத்தாலே அடுத்த 20 ஆண்டுகள் வரை வரும். ஆனால் 33 ஆண்டுகளாக  கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பயன்படுத்தாமலேயே நிர்வாகம் வைத்துள்ளது.

 இதில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் 5 ஆண்டுகள்  பயன்படுத்தாமல் வைத்திருந்தாலே நிலத்தின் உரிமையாளர்களுக்கு திருப்பித் தர வேண்டுமென்று சட்ட விதி கூறுகிறது. இந்நிலையில்  நெய்வேலியில் 3வது சுரங்கம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி சான்றிதழ் வழங்கியுள்ளது.இதையடுத்து நெய்வேலியில் 3வது சுரங்கம் தொடங்குவதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில்,பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்யும் நெய்வேலியின் 3வது நிலக்கரி சுரங்கத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அதற்கு அனுமதி வழங்கிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதி  சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும் என அதில்  குறிப்பிடப்பட்டது. இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு நோட்டீஸ்  அனுப்பி நேற்று உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: