சீன பொருட்கள் மீதான வரி 25 சதவீதமாக உயர்வு : அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் : அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போரின் அடுத்த கட்டமாக மீண்டும் சீன பொருட்கள் மீது வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் வர்த்தகப் போர் தொடங்கியது. இதன் காரணமாக இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. இதனை முடிவுக்கு கொண்டும் வரும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பேச்சுவார்த்தை சாதகமாக இல்லை என்பதை காட்டும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை முதல் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி 10ல் இருந்து 25 சதவிதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைபெற்று வரும் வர்த்தக போர் காரணமாக கடந்த ஜனவரி மாதமே மீண்டும் வரியை உயர்த்த போவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் அமெரிக்கா-சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையால் வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படாததால் ட்ரம்ப் மீண்டும் வரி உயர்வை அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு விதிமுறை வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: