பவானிசாகர் அணை நீர் நிர்வாகம் முறையாக நடப்பதாக நிரூபித்தால் முதல்வருக்கு ஒரு கோடி பரிசு: விவசாயிகள் நலச்சங்கம் அறிவிப்பு

ஈரோடு:  கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் 1958 முதல் 60 ஆண்டுக்கும் மேலாக பவானிசாகர் அணை நீர் நிர்வாகத்தில் அரசாணை, விதிமுறை, காவிரி தீர்ப்பு என எதுவும்  பின்பற்றப்படவில்லை. ஆற்றின் கரையிலும், பழைய பவானி பாசன கால்வாய் கரையிலும் இருக்கும் ஆலைகளின் கண் அசைவிற்கு ஏற்பவே நீர் நிர்வாகம் நடந்து வருகிறது. விருப்பு, வெறுப்பு மற்றும் ஆதாய அடிப்படையில் நீர் நிர்வாகம்  நடந்து வந்துள்ளது.

நடப்பாண்டும் இதற்கு விதிவிலக்கல்ல. பவானிசாகர் அணை நீர் நிர்வாகம் நியாயமாக நடக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசை கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம்  கொடுக்கும். இது முதல்வருக்கு விடப்படும் சவால். குடிநீருக்காக ஆற்றில் தண்ணீர் திறக்காமல் குழாய் மூலமாக கொடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: